டைலர் நாகேஷ் வீட்டிற்கு பறந்த அமைச்சர் பிடிஆர் கார்! ராஜமரியாதையுடன் அழைத்து வந்து நிதியுதவி!

மதுரை: டைலர் நாகேஷ் வீட்டுக்கு தனது காரை அனுப்பி அவரை அழைத்து வரச்சொன்ன அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேரில் நிதியுதவி வழங்கி அவரை திக்குமுக்காட வைத்தார்.

இது தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

”கடந்த 40 வருடங்களாக, தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளைத் தைத்துத் தரும் பணியினை செய்து வரும் டெய்லர் நாகேஷ் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் யூடியூப் சேனலில் தகவல் வெளியாகி இருந்தது.

அந்த காணொளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு டெய்லர் நாகேஷ் தனது வாழ்வாதாரத்துக்கு உதவிடுமாறு ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் டைலர் நாகேஷுக்கு வீட்டு மனை வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டெய்லர் நாகேஷை தன் வீட்டிற்கு அவரது காரில் அழைத்து வந்து அவரது வாழ்வாதாரத்துக்குத் தேவையான நிதியுதவியினை அளித்து உதவினார்.” இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Minister Palanivel Thiagarajan sent his car to Tailor Nagesh house and offered financial aid

இதனிடையே அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் நேரில் நிதியுதவி பெற்றுக்கொண்ட டைலர் ராஜேஷ், மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்தார்.

அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து டைலர் நாகேஷை அமைச்சர் பிடிஆர் அனுப்பி வைத்தார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.