போலீசாரின் செல்போனை தூக்கி கண்ணாமூச்சி ஆட்டம்..! சாராய வியாபாரிகளுக்கு ஷாக்..!

கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற போலீசாரின் செல்போன்களை எடுத்து வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய சாராய வியாபாரிகளை போலீசார் அதிரடியாக தட்டித்தூக்கினர். சாராய விற்பனை குறித்து புகார் அளித்தவரே வந்து போலீசை தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாராய விற்பனையில் தொடர்புடையதாக இளைஞர் ஒருவரை பிடித்துச்சென்ற போலீசாரை தடுத்து வக்குவாதம் செய்யும் இந்த சம்பவம் நாகப்பட்டினம் மாவட்டம் ராமாபுரம் பகுதியல் அரங்கேறி உள்ளது..!

காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாரிடம் அந்த ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் காவலர்களான பிரகாஷ், மாஸ்கோ ஆகிய இருவரும் சாராய வியாபாரிகளை பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த சாராய வியபாரிகள் போலீசாரை கண்டு வயல் பகுதிகளில் இறங்கி ஓட்டம் பிடித்தனர். போலீசார் தாங்கள் வந்த இருச்சக்கர வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிய சாரயாய வியாபாரிகளை துரத்திச் சென்றனர். அப்போது அங்கு வந்த சாராய வியாபாரிகளின் உறவினர்கள், போலீசாரின் இருச்சக்கர வாகனத்தில் இருந்த இரண்டு செல் போன்களை எடுத்து வாய்க்கால் புதருக்குள் ஒளித்து வைத்ததாக கூறப்படுகிறது.

இரு சாராய வியாபாரிகளையும் மடக்கிபிடித்து கூட்டி வந்த போலீசார், காவல் நிலையத்திற்கு தகவல் சொல்வதற்காக செல்போனை தேடிய போது செல்போன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் தியாகராஜன் , செல் போனை கொடுக்காமல் அலைய விட்ட எல்லோர் மீதும் வழக்கு பதிவு செய்வேன் என எச்சரித்ததை தொடர்ந்து, ஒளித்து வைத்திருந்த இரண்டு செல்போன்களையும் எடுத்துக் கொடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகளான சரவணன் மற்றும் தங்கம் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் சாராய விற்பனை குறித்து தகவல் தெரிவித்தது தான் தான், புகாரை வாபஸ் பெறுகிறேன்… விட்டு விடுங்கள் என்று கூறி போலீசாரை தடுத்தார்.

இரு சாராய வியாபரிகளையும் விட மறுத்த இன்ஸ்பெக்டர், அவர்களின் சட்டையை பிடித்து இழுத்துச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்.

சராய வியாபாரிகளை விடுவிக்க வைப்பதற்காக , செல்போனை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு, கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.