டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் மருத்துவமனை பரிசோதனைக்காக இரு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன.
சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பனாஸியா பயோடெக் ஆகிய நிறுவனங்கள் 3ம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பித்துள்ளன.
இதனையடுத்து வயது வந்தோருக்கான தடுப்பூசி சோதனை வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை டெங்குவால் பாதிக்கப்படுவதாகத் மருத்துவக் கவுன்சில் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக மக்கள் தொகையில் பாதி பேர் இப்போதும் டெங்கு தாக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.