வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரி முன்னணி ஹீரோவை தோற்கடிக்கும் அளவிற்கு புதிய புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகர் வனிதா
தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்த நடிகை வனிதா தனது பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளையும் பார்த்து வருகின்றார்.
நடிகை வனிதா 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.
இந்த இரு குழந்தைகளில் ஜோவிகா வனிதாவுடனும், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் உடன் வாழ்ந்து வருகின்றார்.
ஹீரோவை மிஞ்சிய மகன்
சில தினங்களுக்கு முன்பு வனிதாவின் மகன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார். இதனை அவதானித்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இதே போன்று வனிதாவின் மகள் அண்ணனின் புகைப்படத்திற்கு லைக் தெரிவித்தும், அவருக்கு ரிக்யூஸ்ட் கொடுத்தும் இருந்தார். இதற்கு ஸ்ரீஹரியிடம் இருந்து எந்தவொரு பதிலும் இல்லை.
தற்போது ஸ்ரீஹரி தனது மாமா அருண் விஜய்யைப் போன்று கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.