Today Headlines 18 May 2023: இன்றைய தலைப்பு செய்திகள்… ஜல்லிக்கட்டு தீர்ப்பு முதல் வேங்கைவயல் சம்மன் வரை!

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் சட்டம் கொண்டு வந்திருந்தன. இதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. காலை 10 மணிக்கு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகின்றன.கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட படி, அரசு ஊழியர்களுக்கான வீடு கட்ட வழங்கும் முன்பணம் உச்ச வரம்பு 50 லட்ச ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சீறும் சித்தராமையா… அசராத டிகே சிவகுமார்… யாருக்கு CM சீட்?

நெல்லையில் உலகத் தரத்திலான பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாளை அதற்கான அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தமிழகத்தில் 11 மெத்தனால் உற்பத்தி ஆலைகள் மற்றும் 71 மெத்தனால் பயன்படுத்தும் ஆலைகள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்து கையிருப்பு மெத்தனாலை சரிபார்க்க மாவட்ட எஸ்.பி.க்கள், மாநகர ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற்றிட என்.முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் டி.என்.ஏ சோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு மீண்டும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நீதிமன்ற அனுமதி உத்தரவுடன் புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

கர்நாடகா மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதலமைச்சராக டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

உலகம்

சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் முழக்கச் சொல்லை தனது ஷோவில் கிண்டல் செய்ததாக கூறி காமெடியன் லி ஹவுஷிக்கு 16 கோடி ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வர்த்தகம்

சென்னையில் 362வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளையாட்டு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நண்பகல் 12 மணிக்கு தொடங்கவுள்ளது.இன்றைய ஐபிஎல் போட்டியில் ஐதராபாத், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் வெற்றிக்காக போராட வேண்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.