Maruti Wagon R Top Features: இந்தியாவில் உள்ள ஹேட்ச்பேக் கார் பிரிவு நடுத்தர குடும்பங்கள் முதல் மேல் நடுத்தர வர்க்கம் வரை மிகவும் விரும்பப்படும் ஒரு பிரிவாகும். இது இந்தியாவில் கார் துறையில் மிகவும் பிரபலமான பிரிவாகும். இந்த பிரிவின் கார்கள் மலிவு விலை, நல்ல மைலேஜ் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு ஆகியவற்றி காரணமாக அதிகம் வாங்கப்படுகின்றன. ஏப்ரல் 2023 இல், மாருதி சுஸுகி வேகன்ஆர் நாட்டில் அதிகம் விற்பனையாகும் காராக மாறுவதற்கு இதுவே காரணமாகும். உங்களுக்கும் குறைந்த பட்ஜெட்டில் சிறந்த காரை வாங்கும் எண்ணம் உள்ளதா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். மாருதி சுஸுகி வேகன்ஆர் உங்களுக்கு ஏற்ற காராக இருக்கக்கூடும். இந்த கார் நாட்டில் அதிகம் விரும்பப்படும் ஹேட்ச்பேக் காராக ஏன் இருக்கிறது என்பதற்கு இந்த 5 அம்சங்கள் முக்கிய காரணங்களாக உள்ளன.
1. குறைந்த விலை
விலை அடிப்படையில் மிகவும் சிக்கனமான மாருதி வேகன்ஆர், நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பிரபலமான காராக மாறியுள்ளது. வேகன்ஆர் விலை அடிப்படை மாடலுக்கு ரூ.5.54 லட்சத்தில் தொடங்குகிறது. இது டாப் மாடலுக்கு ரூ.7.42 லட்சம் வரை செல்கிறது. இந்த கவர்ச்சிகரமான விலையால், இந்த கார் நடுத்தர வர்க்கத்தினரிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் இந்த காரின் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
2. அதிரடியான மைலேஜ்
பட்ஜெட் காரை வாங்குபவர்கள், காரின் விலைக்குப் பிறகு மிக முக்கியமான அம்சமாக மைலேஜை கருதுகிறார்கள். இந்த நிலையில், மாருதி வேகன்ஆர் அதன் செக்மென்ட்டில் மிகவும் திறமையான எரிபொருள் திறன் கொண்ட காராக கருதப்படுகிறது. மாருதி வேகன்ஆர் பெட்ரோல் வகையில் மைலேஜ் லிட்டருக்கு 23.56 kmpl முதல் 25.19 kmpl வரை உள்ளது. சிஎன்ஜியில் அதன் மைலேஜ் ஒரு கிலோவுக்கு 34.05 கிமீ ஆக இருப்பதால், சிஎன்ஜி மோடுக்கு செல்லும் போது அதன் மைலேஜ் இன்னும் சிறப்பாகிறது.
3. போதிய பூட் ஸ்பேஸ்
பயணத்தின் போது மிக முக்கியமான விலை மற்றும் மைலேஜுக்கு அடுத்தபடியாக பூட் ஸ்பேஸ் மூன்றாவது மிக முக்கியமான காரணியாக இருக்கிறது. காரில் பூட் ஸ்பேஸ் குறைவாக இருந்தால் பயணத்தின் போது லக்கேஜை குறைக்க வேண்டும். இந்த நிலையில், Maruti WagonR மீண்டும் மக்களுக்கு சிறந்த காராக விளங்குகிறது. ஏனெனில் இது 341 லிட்டர் பூட் இடத்தை வழங்குகிறது. அங்கு போதுமான லக்கேஜ்களை வைக்க முடியும்.
4. அற்புதமான அம்சங்கள்
குறைந்த பட்ஜெட்டால் மக்களால் அதிகம் விரும்பப்படும் மாருதி வேகன்ஆர், இதில் அதிக வசதிகளையும் கொண்டுள்ளது. வேகன்ஆர் காரில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ மற்றும் ஃபோன் கண்ட்ரோல்கள், பவர் ஜன்னல்கள், பவர் ஸ்டீயரிங், டூயல் முன் இருக்கை ஏர்பேக்குகள், ஈபிடியுடன் கூடிய ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இவை தவிர பின்புற பார்க்கிங் சென்சார்கள் (ரியர் பார்கிங் சென்சார்) மற்றும் ஹில் ஹோல்ட் உதவி (ஹில் ஹோல்ட் அசிஸ்ட்) ஆகிய அம்சங்களும் இதில் கிடைக்கும்.
5. குறைந்த பராமரிப்பு செலவு
மாருதி வேகன்ஆரின் பராமரிப்புச் செலவும் மிகக் குறைவு. இந்த காரின் சர்விசில் ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.15,821 மட்டுமே செலவழிக்க வேண்டி வரும். மற்ற நிறுவனங்களின் கார்களின் பராமரிப்பு செலவை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. இதன் பொருள் என்னவென்றால், WagonR -ஐ சர்விஸ் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் கணிசமாக குறைந்த செலவாகும். இதனால் இந்த காரை வாங்க மக்கள் இன்னும் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.