இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Sara Ali Khan: கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் இந்திய பிரபலங்கள் நம் பாரம்பரிய உடையில் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கேன்ஸ்பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. மே 17ம் தேதி துவங்கிய கேன்ஸ் திரைப்பட விழா வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. அந்த திரைப்படவிழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தமன்னா, அனுராக் கஷ்யப், விக்னேஷ் சிவன், விஜய் வர்மா, சாரா அலி கான், தயாரிப்பாளர் குனீத் மோங்கா, மிருணாள் தாகூர், இஷா குப்தா, ஊர்வசி ரவ்தெலா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
Cannes 2023: கேன்ஸ் விழாவுக்கு விக்னேஷ் சிவன் போயிருக்காக, ஐஸ்வர்யா ராய் போயிருக்காக, மற்றும்…
வையாபுரி”மறைவுக்கு முன்னாடி எடுத்த Selfie” வையாபுரி உருக்கம்!
குனீத் மோங்காThe Elephant Whisperers படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்கா கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். சேலை அணிந்து அவர் சிவப்புக் கம்பளத்தில் நடந்தார். அந்த விழாவில் பட்டு வேட்டி சட்டையில் கலந்து கொண்டார் மத்திய இணை அமைச்சர் முருகன். அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் குனீத்.
பெருமைRajinikanth: கதம் கதம்: தன் முடிவில் உறுதியாக இருக்கும் ரஜினி- ரசிகர்கள் கவலைஅமைச்சர் முருகன் மட்டும் அல்லாமல் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் இந்திய பாரம்பரிய உடையில் தான் சிவப்புக் கம்பளத்தில் நடந்திருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த இந்திய ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய அரசு சார்பில் கலந்து கொண்டதை பெருமயாக கருதுவதாக தெரிவித்துள்ளார் குனீத் மோங்கா.
மகிழ்ச்சிView this post on InstagramA post shared by Guneet Monga Kapoor (@guneetmonga)
சாரா அலி கான்பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலி கான் முதல் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். முதல் நாள் அன்று டிசைனர் லெஹங்காவில் சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்தார். எத்தனையோ மாடர்ன் உடை இருக்க அவர் லெஹங்காவை தேர்வு செய்தது இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. இதையடுத்து மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சாரா அலி கான்.
சேலைLeo: விஜய் ஒரு குழந்தை மாதிரி: லியோ செட்டில் என்ன செஞ்சிருக்கார்னு பாருங்கமுதல் நாள் லெஹங்காவில் வந்த சாரா அலி கான் மறுநாள் வெள்ளை நிற சேலையில் தேவதை மாதிரி நடந்து வந்தார். அபு ஜானி, சந்தீப் கோஸ்லா வடிவமைத்த சேலையில் சிவப்புக் கம்பளத்தில் கம்பீரமாக நடந்து வந்தார் சாரா. சேலையில் ஒரு டுவிஸ்ட் வைத்து அதை வித்தியாசமாக அணிந்திருந்தார். அவரின் ஹேர்ஸ்டைலும், முத்து மாலையும் பொருத்தமாக இருந்தது.
இஷா குப்தாமிருணாள் தாகூர், ஊர்வசி ரவ்தெலா, இஷா குப்தா ஆகியோர் மாடர்ன் உடையில் சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்தார்கள். ஆனால் சேலையில் வந்த குனீத் மோங்காவும், சாரா அலி கானும் தான் இந்திய ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளனர். ஐஸ்வர்யா ராய் பச்சனும் சேலையில் வருவாரா என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.