இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்காவில் புகைப்படக்காரர்களால் காரில் துரத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மன்னர்இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மகனான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். அரசப் பணிகளை கவனித்து வந்த மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த 6 ஆம் தேதி முறைப்படி முடி சூடிக்கொண்டார்.
Tamilnadu Weatherman: ஆஹா… பாலை வார்த்த வெதர்மேன்… காலையிலேயே சென்னை மக்களுக்கு நல்ல சேதி!
வில்லியம்மன்னர் சார்லஸை தொடர்ந்து அவரது மனைவி கமீலாவும் இங்கிலாந்து ராணியாக முடி சூடிக்கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மன்னர் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். மன்னர் சார்லஸின் மூத்த மகனான வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டன் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றார்.
Losliya: படு மாடர்னாக மாறி பாடாய் படுத்தும் லாஸ்லியா… லேட்டஸ்ட் போட்டோஸ்!
ஹாரி மட்டும்ஆனால் இளைய மகனான ஹாரி மட்டும்தான் இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்றார். அவரது மனைவி மேகன் பங்கேற்கவில்லை. இளவரசர் ஹாரி மட்டும் மன்னரின் முடி சூட்டு விழாவில் பங்கேற்றது பெரும் பேசு பொருளானது. இந்நிலையில் அமெரிக்காவில் இளவரசர் ஹாரிக்கும் அவரது மனைவி மேகனுக்கும் நடந்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.
கள்ளச்சாராயத்த குடிச்சி நீங்க 2 பேரும் போங்க.. நான் ரூ. 10 கோடி கொடுக்றேன்… நக்கலடித்த சீமான்!
காரில் துரத்தல்அதாவது நியூயார்க் நகரில் நடைபெற்ற woman of Vision award நிகழ்ச்சியில் இளவரசர் ஹாரியின் மனைவியும் நடிகையுமான மேகன் மார்க்கெல்லுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மார்க்கெல் மற்றும் மேகனின் தாயார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் மூன்று பேரும் ஒரே காரில் தங்களின் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது இளவரசர் ஹாரியையும் அவரது மனைவி மேகனையும் போட்டோ எடுக்க திரண்ட புகைப்படக்காரர்கள் அவர்களை 10க்கும் மேற்பட்ட கார்களில் விரட்டியுள்ளனர்.
திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் எழுந்தோம்… ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதிலடி!
2 மணிநேரம்..சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக புகைப்படக்காரர்கள் இளவரசர் ஹாரி சென்ற காரை துரத்தியுள்ளனர். இந்த கார் சேஸில் பல விபத்துகள் அரங்கேறியுள்ளது. இதில் ஏராளமான கார்கள் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என நியூயார்க் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். Bhavani Sre: விடுதலை பட ஹீரோயினா இது… க்யூட் லுக்கில் பவானிஸ்ரீ!
இளவரசி டயானாஇந்த பதைபதைக்க வைக்கும் சம்பவத்தை இளவரசர் ஹாரியின் செய்தி தொடர்பாளரும் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அதில் இடைவிடாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சம்பவம் நீடித்தது இதனால் சாலையில் பல விபத்துகள் நடந்தாக தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரி காரில் துரத்தப்பட்ட சம்பவம் 1997 ஆம் ஆண்டு இளவரசி டயானாவின் உயிரை பறித்த சம்பவத்தை நினைவுப்படுத்தியுள்ளது.
சபரீசனுடன் பல முறை போனில் ரகசியமாக பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி… வைத்திலிங்கம் பகீர்!
டயானா மரணம்வேல்ஸ் இளவரசியான டயானா 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி பாரிஸ் நகரில் பாதுகாவலர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது புகைப்படக்காரர்கள் அவரை போட்டோ எடுக்க காரில் துரத்தியதால் பாரிஸில் அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் இளவரசர் ஹாரியின் தாயும் வேல்ஸ் இளவரசியுமான டயானா அகால மரணமடைந்தார். டோடி ஃபயீத் என்ற எகிப்து திரைப்பட தயாரிப்பாளரும் இந்த விபத்தில் மரணமடைந்தார்.