நூற்றுக்கணக்கான படையினர் டெங்கு தடுப்பு நடவடிக்கையில்…

சுகாதாரத் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு தடுப்பு திட்டத்திற்கமைய மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைபிரிவின் 141, 142 மற்றும் 144 வது காலாட் பிரிகேட்களின் நூற்றுக்கணக்கான படையினரால் மே 13 முதல் 15 வரை இராணுவத் தளபதியின் வழிக்காட்டலுக்கமைய சுகாதாரப் பணியாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களுடன் இணைந்து மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் பகுதிகள் மற்றும் வீட்டு வளாகங்களை ஆய்வு செய்தனர்.

இத் திட்டம் பிடகோட்டை, மிரிஹான, உடஹமுல்ல, மாதிவெல, மஹரகம, பிலியந்தலை, வெரஹெர, பொரலஸ்கமுவ, பம்பலப்பிட்டிய, வெள்ளவத்தை, கிரிபத்கொடை, வெலிவேரிய, பெல்லன்வில, களனி, பெம்முல்ல, ராகம, கடுவெல, மாலம்பே மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

மேற்படி டெங்கு தடுப்பு செயற்திட்டங்களை விரைவுபடுத்தும் முயற்சியில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினர் அந்தந்த அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இத் திட்டத்தின் வெற்றிக்காக தமது மனிதவளத்தைப் வழங்கினர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் அந்தந்த பிரதேச செயலகங்கள், பொது சுகாதார காரியாலய அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச நிறுவனங்களுடன் இணைந்து டெங்கு தடுப்புத் திட்டங்களுக்கு தமது உதவிகளை வழங்கினர்.

அதன்படி, 6 வது இலங்கை கள பீரங்கி படையணி, 15 வது ட்ரோன் இலங்கை பீரங்கி படையணி, 5 வது களப் பொறியியல் படையணி, 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 21 வது இலங்கை சிங்க படையணி, 7 வது (தொ) கஜபா படையணி மற்றும் 141 வது காலாட் பிரிகேட்டின் 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 14 வது காலாட் படைபிரிவு தளபதி, 142 மற்றும் 144 வது காலாட் பிரிகேட் தளபதிகள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேநேரம், கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கொழும்பு மஹாநாம கல்லூரியின் சுற்றுப்புற பகுதிகள் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி மூன்று நாள் திட்டத்தில் சுத்தம் செய்யப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.