வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பல்வேறு மொழிகளில் 9 செய்தி சேனல்களை துவங்க பிரபல ஆங்கில டிவி சேனலான என்டிடிவி முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய தகவல் மற்றும் தொடர்புத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் அளித்த விண்ணப்பத்தில் கூறியுள்ளதாவது: என்டிடிவி இயக்குநர்கள் குழு கூட்டம் மே 17 ல் நடந்தது. இந்த கூட்டத்தில், பல இந்திய மொழிகளில், பல கட்டங்களாக 9 செய்தி சேனல்களை துவக்க மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பிப்பது என்ற முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், சேனல்கள் துவங்கப்படும் தேதியை பங்குச்சந்தைக்கும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சரிவு
அதேநேரத்தில் நேற்று( மே 17) மும்பை பங்குச்சந்தையின் என்டிடிவியின் பங்குகள் 1.67 சதவீதம் சரிவை கண்டது. வர்த்தக நேர இறுதியில், அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 172.85 ஆக இருந்தது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனமாக ரூ.1,114.39 கோடி உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள், கடந்த 3 மாதங்களில் 20 சதவீதம், 6 மாதங்களில் 58 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement