நாமக்கல் | ஜேடர்பாளையத்தில் 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: போலீஸ் விசாரணை

நாமக்கல்: ஜேடர்பாளையத்தில் 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதை அடுத்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அடுத்துள்ள ஜேடர்பாளையம் கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை எனக் கூறி வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், போன்ற வற்றிற்கு தீ வைப்பு சம்பவங்கள், அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் இரு மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஷ் என்பவர் நேற்று உயிரிழந்தார். மற்ற மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட போலீஸார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், நேற்று நள்ளிரவு மீண்டும் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பாக்கு மரக் கன்றுகளை வெட்டி சாய்த்தனர்.

அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்த முருகேசன் வாழை மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜேடர்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகேசன் ஏற்கனவே வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த ஆலை கொட்டகையின் உரிமையாளர்கள் முத்துசாமியின் சொந்த மருமகன் ஆவார்.

ஊர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்த வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்துடனே அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழலில், நேற்று நள்ளிரவு மீண்டும் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பாக்கு மரக் கன்றுகளைவெட்டி சாய்த்தனர். அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்த முருகேசன் வாழை மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜேடர்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் அங்கு வந்த மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகேசன் ஏற்கெனவே வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த ஆலை கொட்டகையின் உரிமையாளர்கள் முத்துசாமியின் சொந்த மருமகன் ஆவார். கிராமம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் 400 அதிகமான வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.