கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே மற்றும் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கர்நாடக மாநில பொதுத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மாநில சித்தராமையா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதால், இந்திய காங்கிரஸ் 20.5.2023 அன்று கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (18.5.2023) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 20.5.2023 அன்று பெங்களூரில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி கே சிவகுமார் பதவி ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.