ஜியோ சினிமா தனது பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் 2023 தொடரை அனைவரும் இலவசமாக பார்த்து வரும் நிலையில், இனி OTT பயனர்கள் பணம் செலுத்த வேண்டும். ஜியோ சினிமாவின் பிரீமியம் திட்டம் தொடங்கப்பட்டவுடன், ஐபிஎல் 2023 சீசனின் மீதமுள்ள போட்டிகளைப் பார்க்க பணம் செலுத்த வேண்டுமா? என்பதுதான் பயனர்களின் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ப்ரீமியம் திட்டம், ஐபிஎல் 2023 சீசனை இலவசமாக பார்ப்பதை தடுக்காது.
ஜியோ சினிமா ப்ரீமியம் பிளான்
JioCinema அதன் பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அதற்கான விலைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தின் விலை ஆண்டுக்கு ரூ.999. பயனர்கள் இதற்கு ஒரு முறை பணம் செலுத்த வேண்டும். பின்னர் நீங்கள் ஒரு வருடம் முழுவதும் JioCinema பிரீமியம் திட்டத்தை அனுபவிக்க முடியும். ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தில், பயனர்களின் ஸ்மார்ட்போன்கள், டிவிகள், டேப்லெட்களில் என அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ சினிமா பார்ட்னர்ஷிப்
ஜியோ சினிமா பிரீமியம் திட்டத்தை வாங்கும் பயனர்கள் ஹாலிவுட் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். JioCinema பிரீமியம் திட்டத்திற்கு குழுசேர்ந்த பிறகு, பயனர்கள் பிரத்யேக HBO தொலைக்காட்சியின் தயாரிப்புகள், ஹாலிவுட் நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள், Warner Bros திரைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்க்க அணுகல் கிடைக்கும். ஜியோசினிமா பிரீமியம் திட்டத்திற்கு ஆண்டு சந்தா ரூ.999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் ஜியோசினிமா பிரீமியம் திட்டங்களுக்கு UPI, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
கலக்கத்தில் பிரபல ஓடிடி நிறுவனங்கள்
ஜியோ சினிமா இப்போது நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவிற்கு கடுமையான போட்டியை கொடுக்கும். பயனர்கள் ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள், டிவிகள், டேப்லெட்களில் என அனைத்திலும் நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்யலாம். இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் 4K தெளிவுத்திறனில் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். ஐபிஎல் 2023-க்கு இடையில், ஜியோ சினிமா தனது பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.