மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திலிருந்து சட்டத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு நியமிக்கப்பட்டார்.
அப்போதில் இருந்தே நீதிமன்றங்களுக்கான கொலீஜியம் நியமனங்களை அவர் விமர்சித்து வந்தார். உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பான சர்ச்சை கொலீஜியம் முறை அமலில் இருக்கும் வரை தொடரும் என்றார்.
நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும் சூழ்நிலையை கொலீஜியம் உருவாக்கியுள்ளது என்றும் விமர்சித்தார்.
கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்களை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்று அரசு கையெழுத்திட வேண்டும் என்றால், அரசாங்கத்தின் பங்கு என்ன என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இப்படி தொடர்ச்சியாகப் பேசி வந்தது பா.ஜ.க அரசுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தி வந்துள்ளது. மேலும் இவரைத் தவிர வேறு பா.ஜ.கவினர் யாரும் கொலீஜியத்தை விமர்சித்துப் பேசவில்லை.
இந்நிலையில் மத்திய சட்டத்துறையைப் பறித்து புவி அறிவியல் துறைக்கு கிரண் ரிஜிஜுக்கை மோடி அரசு மாற்றியுள்ளது.
newstm.in