கல்லூரி வளாகத்திலேயே மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர்! பின்னர் நடந்த மேலும் ஒரு துயரம்


இந்திய தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர் ஒருவர், தன்னுடன் பயின்று வந்த மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவர்

டெல்லியின் நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் அஞ்சு சிங்.

இவர் தனது வகுப்பில் பயின்று வந்த நேஹா என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால், இருவருக்கும் இடையே சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மதியம் அஞ்சு சிங் மற்றும் நேஹா இருவரும் பல்கலைக்கழக சிற்றுண்டி விடுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.

கல்லூரி வளாகத்திலேயே மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர்! பின்னர் நடந்த மேலும் ஒரு துயரம் | College Student Shoot Girl Friend In Campus Delhi

வளாகத்திலேயே துப்பாக்கியால் சுட்ட மாணவர்

அப்போது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அஞ்சு சிங் தான் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியால் தனது காதலியை சுட்டுள்ளார்.

இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த நேஹா சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அஞ்சு சிங் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

விடுதியில் தற்கொலை

தனது விடுதிக்கு சென்ற அவர் தன் அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக மாணவர் விடுதிக்கு விரைந்தனர்.

பின்னர் அஞ்சு சிங் மற்றும் நேஹாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி வளாகத்திலேயே மாணவி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.       

கல்லூரி வளாகத்திலேயே மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர்! பின்னர் நடந்த மேலும் ஒரு துயரம் | College Student Shoot Girl Friend In Campus Delhi Representative image



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.