ஜப்பான் சென்று பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட தைவான் விமான நிறுவன தலைவர்..!!

கிழக்காசிய நாடான தைவானில் இயங்கி வருகிறது ஸ்டார்லக்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம். இந்த விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று கடந்த வாரம் ஜப்பானுக்கு 3.45 மணியளவில் புறப்பட வேண்டி இருந்தது. ஆனால், வானிலை காரணமாகவும், பாராமரிப்பு காரணமாகவும் விமான புறப்பட வேண்டியதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

விமானம் இல்லாததால் இரவு 11 மணி வரை பயணிகள் நரிடா விமான நிலையத்திலே தவித்தனர். உணவு உண்ணாமல், உறங்காமலும் பயணிகள் இருந்ததாக தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பின்னர் மறுநாள் காலை 6 மணி அளவில்தான் விமானம் ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் தலைவர் சாங் குயோவே தனது விமான நிறுவனத்தின் செயலுக்கு மன்னிப்பு கேட்பதற்காக ஜப்பான் சென்று பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து சாங் குயோவே கூறும் போது,புயல் காரணமாக முதல் விமானமும், விமான பராமரிப்பு காரணமாக இரண்டாவது விமானமும் தாமதம் ஆனதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். பயண கட்டணத்தை முழுமையாக திருப்பி தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், சாங்கின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதே வேளையில், விமானம் தாமதம் ஆனதற்காக ஜப்பான் சென்று மன்னிப்பு கேட்ட சாங்கை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.