புதுடில்லிபுதுடில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பார்லிமென்ட் கட்டடத்தை, வரும் 28ல், பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
தலைநகர் புதுடில்லியில் தற்போது செயல்பட்டு வரும் பார்லி., கட்டடம், 100 ஆண்டுகள் பழமையானது. இங்கு இடவசதி இல்லாததால், அதற்கு அருகிலேயே பார்லிமென்டிற்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, 2020 டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது, 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கட்டடமாக கட்டப்பட்டுள்ளது.
இதில், 1,224 எம்.பி.,க் கள் அமரும் வகையில் விசாலமான இட வசதி உள்ளது. புதிய பார்லி., கட்டடத்தின் இறுதி கட்ட பணிகள், கடந்த சில நாட்களாக முழு வீச்சில் நடந்து வந்தன.
இந்நிலையில், கட்டடப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, புதுடில்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, அதை திறந்து வைக்கும்படி அழைப்பு விடுத்தார்.
இதன்படி, வரும் 28ல் புதிய பார்லி., கட்டடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement