கன்னியாகுமரி : தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு.!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோடிமுனை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹென்றி ஆஸ்டின்-டெனிலா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தத் தம்பதியினர் உறவினரின் திருமணத்திற்கு சென்றுள்ளனர். அதற்காக தங்கள் சிறுமியின் கழுத்தில் ஒரு பவுன் செயின் அணிவித்திருந்தனர்.
இதையடுத்து அந்த சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியின் கழுத்தில் இருந்த செயினை மர்மநபர் ஒருவர் பிடித்து இழுத்து பறித்துள்ளார்.இதில், அந்த சிறுமிக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் சிறுமி சத்தம் போட்டு கதறி அழுதுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் செயினைப் பறித்த மர்மநபரைப் பிடிக்க முயன்றுள்ளனர் ஆனால், அந்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் டெனிலா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியை வைத்து மர்மநபரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.