கனடாவில் பட்டபகலில் மாஃபியா தலைவர் ஒருவரின் மருமகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தொட முடியாதவர்கள் என எவரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குற்றவியல் வழக்கு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண் ஒருவரின் சடலம்
குறித்த பெண்மணி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை உடல் முழுவதும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.
@CP
உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்ட தகவலில், கொல்லப்பட்டவர் 39 வயதான கிளாடியா ஐகோனோ என குறிப்பிட்டுள்ளனர்.
பொலிசார் இதுவரை கொல்லப்பட்டவரின் அடையாளத்தை உறுதி செய்யாத நிலையில்,
நகர பொலிஸ் தலைவர் ஃபேடி தாகர் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூடு சம்பவமானது திட்டமிடப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் பெண் ஒருவர் குறிவைக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கிளாடியா ஐகோனோ கொல்லப்பட்டது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளாடியா ஐகோனோவின் கணவர் அன்டோனியோ காலோ என்பவர் மாண்ட்ரீல் மாஃபியாவில் கலாப்ரியன் குழுவின் செல்வாக்கு மிகுந்த மோரேனோ காலோ என்பவரின் மகனாவார்.
காலோ கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர், மெக்சிகோவில் உள்ள இத்தாலிய உணவு விடுதி ஒன்றில் 2013ல் படுகொலை செய்யப்பட்டார்.
தற்போது பட்டப்பகலில் கிளாடியா ஐகோனோ படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டமெடுத்த தாக்குதல்தாரி
நகரும் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில், அந்த வாகனம் கட்டடம் ஒன்றில் மோதியுள்ளது. மேலும், தாக்குதல்தாரி சம்பவயிடத்தில் இருந்து ஓட்டமெடுத்ததாகவும், அவர் வாகனம் எதையும் பயன்படுத்தவில்லை எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
Credit: Facebook
பொதுவாக மாஃபியா சண்டைகளில் பெண்கள் குறிவைக்கப்படுவதில்லை எனவும், ஆனால் தற்போது அந்த எல்லைக் கோடு மீறப்பட்டுள்ளது எனவும், இது தொடரவே அதிக வாய்ப்பு எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஐகோனோவின் மரணம் மாண்ட்ரீலின் இந்த ஆண்டின் எட்டாவது கொலை எனவும் சமீபத்திய மாதங்களில் மாஃபியா தொடர்பான இரண்டாவது துப்பாக்கிச் சூடு எனவும் கூறுகின்றனர்.