நியூயார்க், மஹாராஷ்டிராவின் மும்பை நகருக்குள், கடந்த 2008, நவ., 26ல் நுழைந்த லஷ்கர் பயங்கரவாதிகள் 10 பேர், பல்வேறு இடங்களிலும் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 166 பேர் கொல்லப்பட்டனர்.
அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதியை தவிர, மற்றவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் கடந்த 2012ல் துாக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில், வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த பாக்., வம்சாவளி தொழிலதிபர் தஹாவுர் ராணாவுக்கு, இந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பாக்., வம்சாவளி டேவிட் கோல்மேன் ஹெட்லியுடன், ராணா நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், தாக்குதலுக்கான சதித்திட்டம் தீட்டப்படும் போது அவர் உடன் இருந்ததாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி, அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரியது.
இது தொடர்பான வழக்கு, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தஹாவுர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement