ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலை. இணைந்து Data Science, Artificial Intelligence முதுநிலை படிப்புகள்!

சென்னை: இந்திய தொழில்நுட்பக் கழகமும் (ஐஐடி சென்னை), பர்மிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து தரவு அறிவியல் (Data Science) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ) ஆகியவற்றில் புதிய முதுநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கின்றன.

இப்படிப்புக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இரு பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்படும் பட்டத்தைப் பெறுவதோடு, பர்மிங்காம் மற்றும் சென்னையில் படிக்கலாம். அவர்கள் ஆராய்ச்சித் திட்டத்தையும் மேற்கொள்வர்.

இதர சர்வதேச படிப்புகளுக்கான கட்டணத்தை விட இதற்கான கட்டணம் குறைவாகும்.

இப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 11 ஜூன் 2023 ஆகும்.

எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய கூடுதல் தகவல்களை https://ge.iitm.ac.in/birmingham/ இல் காணலாம்.

ஐந்து மாதங்கள் அல்லது பன்னிரெண்டு மாதங்கள் இங்கிலாந்தில் தங்கிப்படிக்கும் வாய்ப்பை இந்த திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்குகின்றன. 2023 ஜூலையில் மாணவர்கள் ஐஐடி மெட்ராஸில் படிப்பைத் தொடங்கும் நிலையில், விருப்பத்திற்கேற்ப பர்மிங்காம் அல்லது சென்னையில் படிப்பை நிறைவு செய்யலாம்.

இது குறித்துப் பேசிய ஐஐடி சென்னையின் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி,”பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் நீண்ட மற்றும் பயனுள்ள தொடர்புக்கு இது ஒரு சிறந்த தொடக்கம்” எனக் கூறினார்.

மாணவர்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன:

– 12 மாதங்கள் இங்கிலாந்தில் தங்கிப் படித்து அங்கேயே ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்

IIT Madras, Birmingham University invites applications for PG in Data Science, Artificial Intelligence

– ஐந்து மாதங்கள் இங்கிலாந்தில் படித்து, பின்னர் ஐஐடி சென்னைக்குத் திரும்பி, படிப்பை முடித்து, ஐஐடி சென்னையிலேயே ஆராய்ச்சியைத் தொடருதல்.

– 60% மதிப்பெண்களுடன் அறிவியல் அல்லது பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்தப் பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். CBSE/ CISCE/ மேற்கு வங்க பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பில் ஆங்கிலத்தில் 75% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் பிற இந்திய மாநில வாரியங்களில் இருந்து 12 ஆம் வகுப்பில் ஆங்கிலத்தில் 80% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு TOEFL/IELTS/PTE கல்வித் தேர்வைச் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இளங்கலை பாடத்தில் பயிற்றுவிக்கும் மொழியாக ஆங்கிலம் இல்லை என்றால், மாணவர்கள் மேலே உள்ள தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.