Today Headlines 19 May 2023: இன்றைய தலைப்பு செய்திகள்… 10ஆம் வகுப்பு ரிசல்ட் முதல் ChatGPT AI ஆப் வரை!

தமிழ்நாடு

10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. http://tnresults.nic.in , http://dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாக தொ.மு.ச பொன்விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ChatGPT AI இனி மொபைல் ஆப் வடிவிலும் கிடைக்கும் என்று OPEN AI நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரிலும், அடுத்து ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும் கிடைக்கும்.
நிழல் தரும் மரமாக விளங்கும் ஆகாய நடைபாதை

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்கின்றனர்.சென்னை ஜாஃபர்கான்பேட்டை அருகே உள்ள பாரி நகர் கரிகாலன் தெருவில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.கோவையில் காணாமல் போன 12 வயது சிறுமி ஸ்ரீநிதி பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே மீட்டது போலீஸ். பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு சிறுமி வெளியேறியதாக தெரியவந்துள்ளது.ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கொண்டாடினார்.

இந்தியா

கர்நாடகா மாநில முதலமைச்சராக சித்தராமையா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி ஆளுநர் தவார்சந்த் கெலாட்டிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது. அவரும் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.வரும் 29ஆம் தேதி காலை 11.15 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-2 வழிகாட்டி செயற்கைக்கோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. இது நடப்பாண்டில் இஸ்ரோ ஏவும் 3வது செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தகக்து.டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.ஹரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில் ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி வழங்கும் வகையில் மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

வர்த்தகம்

சென்னையில் 363வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளையாட்டு

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பெங்களூரு அணி 4வது இடத்திற்கு முன்னேறியது.காயம் காரணமாக பிரெஞ்சு ஓபனில் இருந்து ரபேல் நடால் விலகினார். இவர் 2024ஆம் ஆண்டுடன் ஓய்வு பெறவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.