ராஜ குடும்பத்தில் புதிய பிரச்சினை: ராணி கமீலாவால் உரசல்…


ராஜ குடும்பத்தில் புதிய பிரச்சினை உருவாகியுள்ளதாகவும், பிரச்சினையின் மையத்தில் இருப்பது ராணி கமீலா என்றும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிப்படையாக அலட்சியம் செய்யப்பட்ட கமீலா

 மன்னர் மற்றும் ராணியின் முடிசூட்டுவிழாவின்போது நடந்த ஒரு குறிப்பிட்ட விடயத்தை ஆதாரமாக காட்டும் ராஜ குடும்ப எழுத்தாளரான Tom Bower, ராணி கமீலாவுக்கும் இளவரசி கேட்டுக்கும் இடையில் உரசல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, மன்னரும் ராணியும் முடிசூட்டப்பட்டபின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து வெளியேறும் நேரத்தில், கூடியிருந்த மக்கள் தலைவணங்கி மன்னருக்கு மரியாதை செலுத்தினார்களாம்.

ராஜ குடும்பத்தில் புதிய பிரச்சினை: ராணி கமீலாவால் உரசல்... | New Issue Royal Family Friction By Queen Camilla

ஆனால், கமீலா கடந்து செல்லும்போதோ, யாரும் மரியாதை செலுத்தவில்லையாம். சொல்லப்போனால், அசையக்கூட இல்லையாம்.

இளவரசி கேட்டுக்கும் கோபம்

அதேபோல, இளவரசர் வில்லியமுக்கும், அவரது மனைவியான கேட்டுக்கும் கூட கமீலா மீது கோபம் இருப்பதாகத் தெரிவிக்கிறார் Tom Bower. 

அதற்குக் காரணம், முடிசூட்டுவிழாவுக்கு பொவ்ல்ஸ் குடும்பத்திலிருந்து, அதாவது கமீலா குடும்பத்திலிருந்து 20 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், மிடில்ட்டன் குடும்பத்திலிருந்து, அதாவது கேட் குடும்பத்திலிருந்து வெறும் 4 பேர்தான் அழைக்கப்பட்டிருந்தார்களாம்.

மேலும், மன்னரின் இரகசிய காதலி என அழைக்கப்பட்ட நிலையிலிருந்து கமீலா ராணி என்ற நிலைக்கு வருவதற்காக பாடுபட்டவர்களைக் கூட அவர் முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கவில்லை. ஆகவே, அவர்களும் கமீலா மீது கோபமாக இருக்கிறார்கள் என்கிறார் Tom Bower. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.