Battlegrounds Mobile India | மீண்டும் வரும் ‘இந்திய பப்ஜி’ – உறுதி செய்த கிராஃப்டான்

சென்னை: வெகுவிரைவில் இந்தியாவில் Battlegrounds Mobile India (BGMI) மொபைல் போன் கேம் மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக கிராஃப்டான் நிறுவனம் உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்பிள் ஐஓஸ் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 வாக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக சீன தேச செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதில் பரவலாக பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பப்ஜி மொபைல் கேமும் அடங்கும். தொடர்ந்து அதற்கு மாற்று எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் எகிறி இருந்தது.

அத்தகைய சூழலில் தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் வடிவமைப்பு நிறுவனமான கிராஃப்டான், Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்தது. இதனை கடந்த 2021 ஜூலை வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதே நேரத்தில் இதனை இந்திய நாட்டுக்கான புதிய பப்ஜி வெர்ஷன் என பலரும் சொல்லி வந்தனர்.

இந்த செயலி அறிமுகமானது முதல் பலரும் அதனை ஆர்வமுடன் டவுன்லோடு செய்து, தங்கள் போனில் இன்ஸ்டால் செய்து, விளையாடி வந்தனர். இந்நிலையில், இந்த செயலி கடந்த ஆண்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த பப்ளிஷர் மூலம் மீண்டும் பிஜிஎம்ஐ கேமை கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது. இந்தச் சூழலில் இந்தியாவில் மீண்டும் தங்களது செயல்பாடுகளை தொடங்க அனுமதித்த இந்திய அதிகாரிகளுக்கு நன்றி என கிராஃப்டான் தற்போது தெரிவித்துள்ளது. இருந்தாலும் இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், மொபைல் கேம் அடிக்‌ஷன் சார்ந்தும் இந்த முறை கிராஃப்டான் கவனம் வைத்துள்ளதாக தெரிகிறது. எப்படி இருந்தாலும் வெகு விரைவில் இந்த கேம் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்தியாவில் கால் ஆஃப் டூட்டி, கரேனா ஃப்ரீ ஃபயர் போன்ற கேம்களும் கேம் பிரியர்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.