11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின
தமிழகத்தில் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
11-ஆம் வகுப்பில் 90.93 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்
மாணவிகள் 94.36% சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்
மாணவர்கள் 86.99 % 11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி
மாணவர்களை விட 7.37% அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்
தமிழ் மொழிப் பாடத்தில் 9 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர்
ஆங்கிலத்தில் 13 பேரும் கணிதத்தில் 17 பேரும் 100 சதவீதம் மதிப்பெண் எடுத்தனர்
இயற்பியலில் 440 பேரும் வேதியியலில் 107 பேரும் 100-க்கு 100 எடுத்தனர்
உயிரியல் பாடத்தில் 65 பேரும் விலங்கியலில் 34 பேரும் தாவரவியலில் 2 பேரும் 100 சதவீத மதிப்பெண் பெற்றனர்
96.38% தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது
ஈரோடு மாவட்டம் 96.18% தேர்ச்சி விகிதத்துடன் இரண்டாம் இடம் பெற்றது
95.73% தேர்ச்சி விகிதத்துடன் கோவை மாவட்டம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது
82.58 % தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது
கடந்த ஆண்டு 90.07 %-ஆக இருந்த தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 90.93 %-ஆக உயர்வு
அரசுப் பள்ளிகள் 94.97 % தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன
11-ஆம் வகுப்பு தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி அடைந்தார்
தேர்வு எழுதிய 5,709 மாற்றுத் திறனாளிகளில் 5,080 பேர் தேர்ச்சி அடைந்தனர்
மாற்றுத் திறனாளிகளின் தேர்ச்சி விகிதம் 88.98%
11-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 125 சிறைவாசிகளில் 108 பேர் தேர்ச்சி பெற்றனர்
கணினி அறிவியல் பாடத்தில் 940 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர்
கணக்குப் பதிவியலில் 995 பேரும் வணிகவியலில் 214 பேரும் 100 சதவீத மதிப்பெண் எடுத்தனர்
பொருளியல் பாடத்தில் 40 மாணவர்கள் 100-க்கு 100 எடுத்தனர்
கணினி பயன்பாடுகள் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் 598 பேர்
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 132 பேர் 100-க்கு 100 பெற்றனர்