புதுடில்லி: உத்தரபிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பிரசோதனை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் அருகே, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் பல ஹிந்து கடவுள்களின் சிலைகளும் உள்ளன. அதில் கோவிலினுள் சிவலிங்க வடிவிலான பொருள் இருப்பது தெரியவந்தது. இது சிவலிங்கம் தான் என ஹிந்துக்கள் தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது. அதை தொல்லியல்துறை ஆய்வுக்கு உட்படுத்த வைக்கப்பட்ட கோரிக்கையை, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்த சிவலிங்க வடிவ பொருளை, இந்திய தொல்லியல் துறையினரின் அறிவியல்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிவலிங்க வடிவ பொருளை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement