கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தன்னுடைய வழக்கமான போன்களுடன் தற்போது கூகுள் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பான “பிக்சல் ஃபோல்ட்” போனையும் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
பிக்சல் ஃபோல்ட் வெளியீடு
கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் சந்திப்பு மே 10 திகதி நடத்தப்பட்டது, இதில் “பிக்சல் ஃபோல்ட்” (pIxel Fold) ஸ்மார்ட்போனை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது.
இந்த மாடல் அந்த நிறுவனத்தின் முதல் மடிப்பு ரக ஸ்மார்ட்போன் ஆகும்.
இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரபல யூடியூப்பரான அருண் மைனி(Mrwhosetheboss) உடன் வருங்கால ஸ்மார்ட்போன்கள் குறித்து நீண்ட உரையாடலை நடத்தினார்.
/BLOOMBERG/GETTY IMAGES
சுந்தர் பிச்சை பயன்படுத்தும் போன்கள்
அப்போது “பிக்சல் ஃபோல்ட்” போனை பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய சிஇஓ சுந்தர் பிச்சை, ஆமாம் “பிக்சல் ஃபோல்ட்” ஸ்மார்ட்போனை மதிப்பிடுவதற்காக சிறிது காலமாக பயன்படுத்தி வருவதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய விமான பயணங்களின் போதும், என்னுடைய பிஸியான நாட்களிலும் இலகுவான போன்களை வைத்து இருக்க விரும்புகிறேன், ஏனென்றால் நான் செய்வது எல்லாம் என்னுடைய போனை வெளியே எடுத்து விரைவாக மின்னஞ்சலை சரிபார்ப்பது மட்டுமே என்று கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சிஇஓ சுந்தர் பிச்சை அவருடைய முதன்மை ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சஸ் 7 ப்ரோ உடன், சாம்சங் கேலக்ஸி மற்றும் ஐபோன் ஆகிய ஸ்மார்ட்போன் சிலவற்றை மதிப்பிடுவதற்காக பயன்படுத்தி வருகிறார்.
அதே சமயம் தான் பயன்படுத்தும் ஒவ்வொரு போன்களிலும் ஒவ்வொரு சிம் கார்டு பயன்படுத்தி வருவதையும் சுந்தர் பிச்சை தெளிவுபடுத்தியுள்ளார்.