Breaking: தமிழகம் முழுவதும் 35 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. அரசு அதிரடி உத்தரவு.!

தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், ‘‘இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் ஏடிஜிபியாக இருந்த ராஜீவ்குமார், டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்படுகிறது. அதேபோல் ஆவடி கமிஷனராக இருந்த ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை காவலர் பயிற்சி பள்ளி டிஜிபியாக பதவி உயர்வு பெறுகிறார். ஊழல் தடுப்பு இயக்குநராக இருந்த ஏடிஜிபி அபே குமார் சிங், அதேபிரிவின் டிஜிபியாக பதவி உயர்த்தப்படுகிறார். TANGEDCO ஏடிஜிபி வன்னிய பெருமாள், அதேபிரிவில் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்படுகிறார்.

அதேபோல் சிவில் சப்ளைஸ் ஏடிஜிபி அருண், ஆவடி கமிஷனராக இடமாற்றம் செய்யப்படுகிறார். சென்னை துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான், திருப்பத்தூர் எஸ்பியாக மாற்றம் செய்யப்படுகிறார். மாநில குற்ற ஆவண காப்பக எஸ்பியாக இருந்த ஸ்ரேயா குப்தா, சென்னை துணை கமிஷனராக மாற்றபடுகிறார். சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிசனர் ஹர்ஸ் சிங், நாகப்பட்டினம் எஸ்பியாக மாற்றம் செய்யப்படுகிறார்’’ என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.