திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கால்கடுக்க பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி என்றாலே லட்டுதான். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்பவர்கள் லட்டு வாங்காமல் திரும்ப மாட்டார்கள்.
திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டுக்கள், தயாரிக்கும் இடத்தில் இருந்து தட்டுக்களில் அடுக்கப்பட்ட கன்வேயர் பெல்ட் மூலம் பிரசாதம் விற்பனை செய்யப்படும் கவுண்டர்கள் அருகே கொண்டு வரப்படும். அப்படி தட்டுக்களில் வரும் லட்டுக்களை ஊழியர்கள் தள்ளுவண்டிகள் மூலம் அங்குள்ள அலமாரிகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
Karnataka: காங்கிரஸுக்கு அடுத்த தலைவலி.. எனக்குதான் துணை முதல்வர் பதவி.. போர்க்கொடி தூக்கும் பரமேஸ்வரா!
அலமாரிகளில் அடுக்கப்படும் லட்டுக்கள் டோக்கன்கள்படி பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தள்ளுவண்டிகளில் லட்டுக்களை கொண்டு செல்லும் ஊழியர்கள் லட்டுக்களை திருடி பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் லட்டு எடுத்துச் செல்லும் பணியை கமுக்கமாக கண்காணித்தனர். அப்போது தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 750 லட்டுகளை திருடி செல்வது கண்டுபிடித்தது. இதையடுத்து அவர்களை கையும் காளவுமாக பிடித்த அதிகாரிகள் அந்த 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
The Kerala Story: தி கேரளா ஸ்டோரி படத்திற்கான தடை நீக்கம்… உச்சநீதிமன்றம் அதிரடி!
அதில் 5 பேரும் இதுவரை 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரையும் கைது செய்துள்ள அதிகாரில் லட்டு திருட்டில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று டயர்டு ஆவதை பயன்படுத்திக்கொண்ட ஊழியர்கள் இப்படி லட்டுக்களை திருடி பிளாக்கில் விற்பனை செய்து வந்துள்ளனர்.