39 பேருடன் மூழ்கிய சீன கப்பலை கண்டுபிடித்தது இந்திய கடற்படை விமானம்


இந்திய பெருங்கடலில் 39 பேருடன் மூழ்கிய சீன மீன்பிடி கப்பல் மற்றும் லைஃப் ராஃப்ட் ஆகியவற்றை இந்திய கடற்படையின் P8I விமானம் கண்டுபிடித்துள்ளது.

இந்திய கடற்படையினர்

பல நாடுகளின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஒரு பாரிய திருப்புமுனையாக, இந்திய கடற்படையினர் மூழ்கிய சீன மீன்பிடி கப்பலான Lu Peng Yuan Yu 28-ஐ கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடலின் நடுவில் செவ்வாய்கிழமை அதிகாலையில் மூழ்கிய இந்த கப்பலில் 39 பணியாளர்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது. 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் 5 பிலிப்பைன்கள் அதில் பயணித்தனர்.

இந்த கப்பல் கன்னியாகுமரிக்கு தெற்கே தோராயமாக 1660 கிலோமீட்டர் தொலைவில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

39 பேருடன் மூழ்கிய சீன கப்பலை கண்டுபிடித்தது இந்திய கடற்படை விமானம் | Indian Navy Found Sunken Chinese Fishing Vesselthegeopolitica.com

Boeing Poseidon (P8I) விமானம்

இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மீட்புக் குழுவினர், கடற்படையினர் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டன. அவற்றுடன், இந்திய கடற்படை அதன் மிக சக்திவாய்ந்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் வேட்டையாடும் விமானமான Boeing Poseidon (P8I) விமானத்தை தேடுதல் பணியில் ஈடுபடுத்தினர்.

இந்த விமானம் இரவும் பகலும் செயல்படும் திறன் கொண்டது, இதில் அதிநவீன சென்சார்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த விமானத்தை தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் பயன்படுத்த முடியும்.

39 பேருடன் மூழ்கிய சீன கப்பலை கண்டுபிடித்தது இந்திய கடற்படை விமானம் | Indian Navy Found Sunken Chinese Fishing VesselIndian Navy’s P8I Maritime Patrol Aircraft (Boeing India /Twitter)

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, புலனாய்வு சேகரிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய கடற்படை P8I விமானத்தை பயன்படுத்திவருகிறது.

ராஜாளி கடற்படை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் P8I விமானம்

தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் உள்ள கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் ராஜாளியிலிருந்து ( INS Rajali in Arakkonam) இயக்கப்படும் பி8ஐ விமானம், கவிழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் பகுதியில் விரிவான சோதனை நடத்தி, சீன மீன்பிடி கப்பலை கண்டுபிடித்தது.

கவிழ்ந்த இடத்தை அப்பகுதியில் இயங்கி வரும் சீன கடற்படை போர்க்கப்பல்களுக்கு (People’s Liberation Army Navy) இந்திய கடற்படை தெரிவித்தது.

39 பேருடன் மூழ்கிய சீன கப்பலை கண்டுபிடித்தது இந்திய கடற்படை விமானம் | Indian Navy Found Sunken Chinese Fishing Vesselphoto of Indian Navy’s P-8I aircraft | By special arrangement

மூழ்கிய கப்பலில் இருந்தவர்களின் நிலை

மூழ்கிய கப்பலின் இரண்டு பணியாளர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மீதமுள்ள 37 பேரின் நிலை இன்னும் தெரியவில்லை.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள ஒரு சில நாடுகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு விமானங்களை அனுப்பியுள்ளன, சீனா தனது மீன்பிடி கப்பல்களை அனுப்பியுள்ளது மற்றும் கடற்படை கப்பல்கள், இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேஷியா ஆகியவை தொடர்ந்து நடவடிக்கைகளில் ஒருங்கிணைத்து வருகின்றன.


Indian Navy, Chinese Fishing Boat, Indian Ocean



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.