முதல்வர் ஸ்டாலின்: என்னது இரு கைகள் இல்லாமலையா.. Don't worry.. நான் இருக்கேன்.!

10ம் வகுப்பு மாணவனின் கோரிக்கைக்கு செவி சாய்த்த முதல்வர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை 10ம் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். இந்தநிலையில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 91.39% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. அதேபோல் மாணவர்களை விட 6.50 சதவிகிதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல் ஆயிரத்து 26 அரசு பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் அரசு பள்ளிகள் 87.45%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97.38% தேர்ச்சி சதவிகிதத்தை பதிவு செய்துள்ளன. அதேபோல் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 மாணவர்கள் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இந்தநிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 7 லட்சத்து 6 ஆயிரத்து 413 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 90.93% என்ற தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர். வழக்கம் போலவே மாணவர்களை விட 7.37 சதவிகிதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த க்ரித்தி வர்மா என்ற 10ம் வகுப்பு மாணவன் இரண்டு கைகள் இல்லாமல் தேர்வு எழுதி 437 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். மேலும் கைகள் பொறுத்த தமிழ்நாடு அரசு உதவி செய்தால், தன்னால் மேலும் சாதிக்க முடியும் என ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்ற மாணவனின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘‘இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மாவின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது.

மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்! அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.