2,000 ரூபாய் நோட்டுகளை, மத்திய ரிசர்வ் வங்கி 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. அது முதலே 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் உலவிக்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து, `2,000 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இல்லை என்பதால், 2,000 ரூபாய் நோட்டுகள் இனி அச்சடிக்கப்பட மாட்டாது’ என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், தற்போது புழக்கத்திலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவுசெய்திருக்கிறது. மே.23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஒரு முறைக்கு 20,000 ரூபாய் வரை… (10) 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், செப்டம்பர் 30-ம் தேதி வரை மக்கள் வங்கிகளுக்குச் சென்று 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.