பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் துரைமுருகன் மீது ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார் ஆர்டிஐ ஆர்வலரான கல்யாணசுந்தரம்.
அமைச்சர் துரைமுருகன்தமிழக அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்து வருபவர் துரைமுருகன். திமுகவின் மூத்த தலைவர். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார். கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலும் சரி, தற்போது ஸ்டாலின் முதல்வராக உள்ள காலத்திலும் சரி மூத்த தலைவர், கட்சிக்காக பாடுபட்டவர் என்ற அடிப்படையில் அமைச்சரவையில் இடம் பிடித்து விடுகிறார்.
சர்ச்சை பேச்சுஇந்நிலையில் சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், அரசு வழங்கும் 1000 ரூபாய் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பயன்படுத்துவது குறித்து கொச்சையாக பேசினார். அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. துரைமுருகன் பேசிய வீடியோவும் வைரலானது.
ஆளுநரிடம் புகார்துரைமுருகன் பேசிய வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டிதீர்த்தனர். அமைச்சர் துரைமுருகன் பேசியது குறித்த செய்தி ஊடங்களில் வெளியானது. இந்நிலையில் ஆர்டிஐ எனப்படும் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் ஆர்வலரான கல்யாணசுந்தரம் அமைச்சர் துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் ஆர்என் ரவி, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்அதில் அமைச்சர் துரைமுருகனின் பேச்சு தரக்குறைவாக உள்ளதாகவும் பெண்கள் மீதான மரியாதையை குலைக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் மீது தகவல் தாத்தா என அழைக்கப்படும் ஆர்டிஐ ஆர்வலர் கல்யாணசுந்தரம் ஆளுநர் மற்றும் தலைமை செயலாளரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்முடி பேச்சு
ஏற்கனவே திமுககாரர்கள் கொண்டு வரும் பிரச்சனைகளால் தனக்கு தூக்கம் இல்லை, ஒவ்வொரு நாளும் இன்று என்ன பிரச்சனையை கொண்டு வருவார்களோ என்ற பயத்துடனே எழுவதாக கூறினார் முதல்வர் ஸ்டாலின். பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் குறித்து மோசமாக விமர்சித்த பொன்முடியையும் தட்டி வைத்தார். தற்போது அமைச்சர் துரைமுருகனின் பேச்சு ஆளுநர் வரை சென்றிருப்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.