சென்னை: Bala Beat Ajith (அஜித்தை அடித்த பாலா) நான் கடவுள் படம் சமயத்தில் அஜித்தை அறையில் வைத்து இயக்குநர் பாலா அடித்ததாக ஒரு செய்தி உலாவும் சூழலில் அன்று என்ன நடந்தது என்பது குறித்து பிரபலம் மனம் திறந்திருக்கிறார்.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் அஜித்குமார். ஹெச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஹீரோயின் யார் என்பதை இன்னும் படக்குழு முடிவு செய்யவில்லை.
வித்தியாசமாக நடித்த அஜித்: அஜித் இப்போது கமர்ஷியல் ஹீரோவாக இருக்கிறார். ஆனால் தனது கரியரின் ஆரம்பத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து கெட்டப்புகளை மாற்றி நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த வாலி,வில்லன், வரலாறு,சிட்டிசன் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகவும் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வரலாறு படத்தில் பெண் குணாதிசியங்களோடு ஏற்றிருந்த கதாபாத்திரம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
நான் கடவுளில் அஜித்: அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மேலும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்கும் உற்சாகத்தை அஜித்துக்கு கொடுத்தது. அதன் காரணமாக தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநரான பாலாவின் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அவர் கமிட்டான படம் நான் கடவுள். அந்தப் படத்துக்காக நீளமான முடி வளர்த்து 20 கிலோவரை உடல் எடையையும் அஜித் குறைத்திருக்கிறார்.
அஜித்தை ஹோட்டலில் அடித்த பாலா: பாலா படத்தில் நடித்தால் நிச்சயம் நடிப்பு ரீதியாக தன்னை மேலும் மெருகேற்றிக்கொள்ளலாம் என்ற ஆசையோடு பாலா சொன்ன பேச்சையெல்லாம் கேட்டார் அஜித். இப்படிப்பட்ட சூழலில் அஜித்தை இயக்குநர் பாலா ஹோட்டல் அறையில் வைத்து அடித்துவிட்டார் என்ற செய்தி தீயாக பரவியது. இன்றுவரை அந்த செய்தி உண்மையா இல்லை வதந்தியா என சம்பந்தப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. இயக்குநர் பாலாவிடம் இதுகுறித்து ஒரு பேட்டியில் கேட்டபோதுகூட தெளிவான பதிலை அவர் கொடுக்கவில்லை.
என்ன நடந்தது: இந்நிலையில் அந்த சம்பவம் நடந்த என்று உண்மையில் என்ன ஆனது என தெரியவந்திருக்கிறது. அஜித்துக்கு பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நான் கடவுள் படத்தில் பல ரிஸ்க்கான காட்சிகள் இருக்கின்றன. உதாரணமாக தலைகீழாக நின்று இரண்டு கால்களையும் சமணம் போட்டு யோகாசனம் செய்யும் காட்சியை கூறலாம். ஒருநாள் ஹோட்டல் பாம்க்ரோவில் இந்தப் படம் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் இந்த மாதிரியான காட்சிகள் வேண்டுமா என அஜித் பாலாவிடம் கேட்டாராம்.
யாருக்காகவும் தன்னுடைய கதையையும், காட்சியையும் மாற்றாத பாலா நிச்சயம் வேண்டும் என கூறினாராம். ஆனால் அஜித் அதற்கு ஒத்துவரவில்லையாம். இப்படியே இருதரப்பும் பேசிக்கொண்டிருக்கும்போது வாக்குவாதம் முற்றிவிட்டதாம். அந்த சமயத்தில் பாலாவுடன் இருந்தவர்களில் யாரோ ஒருவர் தனது கையை வைத்து அஜித்தின் முதுகில் தட்டிவிட்டராம். இந்த விஷயத்தை அஜித்குமார் தனக்குள்ளேயே வைத்து புதைத்துவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார்.