Vodafone Idea recharge plan: வோடோஃபோன் ஐடியா (விஐ) ஆனது சமீபத்தில் மலிவு விலையில் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வோடோஃபோன் ஐடியா (விஐ) தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் வெறும் ரூ. 45க்கு கிடைக்கிறது. வோடோஃபோன் ஐடியா (விஐ) அறிமுகப்படுத்தியுள்ள இந்த மலிவு விலை ரீசார்ஜ் திட்டமானது களத்தில் அதன் போட்டியாளர்களாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கப்போகிறது. வோடோஃபோன் ஐடியாவின் இந்த புதிய ரூ 45 திட்டம் 180 நாட்கள் செல்லுபடியாகும், இது சுமார் 6 மாதங்கள் ஆகும். ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல்வேறு சிறப்பான திட்டங்களை வழங்கி வரும் நிலையில், வோடோஃபோன் ஐடியாவின் இந்த மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் சிறப்பானதாக கருதப்படுகிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த திட்டம் சிறந்ததாக விளங்குகிறது.
வோடோஃபோன் ஐடியா (விஐ) வழங்கும் இந்த ரூ.45 ரீசார்ஜ் திட்டம் 180 நாட்களுக்கு ஒரு மிஸ்டு கால் அலர்ட் சேவையுடன் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. மொபைல் ஸ்விட்ச் ஆஃப் அல்லது ஃபிளைட் மோடில் இருக்கும் போது முக்கியமான அழைப்புகளைத் தவறவிடுபவர்களுக்கு இது உதவிகரமானதாக இருக்கிறது. இருப்பினும், இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களை செய்தி அனுப்புதல், இணையம் அல்லது ஓடிடி போன்ற சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்காது. சமீபத்தில் வோடோஃபோன் ஐடியா (விஐ) இந்தியாவில் உள்ள தனது பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்தது. இந்த சலுகையின் ஒரு பகுதியாக, பயனர்கள் விஐ செயலி மூலமாக செய்யப்படும் ரீசார்ஜ்களில் கூடுதலாக 5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த சலுகை ரூ.199க்கு மேல் உள்ள ‘மஹா ரீசார்ஜ்’களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த சலுகையின்படி ரூ.199 முதல் ரூ.299 வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதலாக 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் ரூ.299க்கு மேல் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 5ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும் மற்றும் கூடுதல் இலவச டேட்டா மூன்று நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், பின்னர் அது காலாவதியாகிவிடும்.
மேலும் ஏர்டெல் நிறுவனமும் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. ஏர்டெல்லின் ரூ.265 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஆப் பிரத்தியேக 2 ஜிபி டேட்டா கூப்பன் வழங்கப்படுகிறது. இது தவிர, HelloTunes மற்றும் Wynk Music இன் இலவச சந்தா வழங்கப்படுகிறது. அழைப்பிற்கு அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்டிடி நிமிடங்கள் வழங்கப்படும். இதனுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. ஏர்டெல்லின் ரூ.2999 திட்டம் 365 நாட்கள் அதாவது ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தில் மாதச் செலவு சுமார் 250 ரூபாய். இருப்பினும், நன்மைகளைப் பற்றி நாம் பேசுனால், ஏர்டெல்லின் ரூ.265 மாதத் திட்டத்துடன் ஒப்பிடும்போது, ரூ.250 வருடாந்திரத் திட்டமானது அதிக டேட்டா மற்றும் பல கூடுதல் அம்சங்களை வழங்குகிறது. ஏர்டெல்லின் ரூ.2999 திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், அன்லிமிடெட் காலிங் வசதியும் உள்ளது. இது தவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.