JR. NTR Net Worth: விலை உயர்ந்த கார்..விதவிதமான வாட்ச்.. ஜூனியர் என்டிஆரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

சென்னை : ஜூனியர் என்டிஆரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். டி. ராமாராவுடைய பேரன் நந்தமூரி தாரக ராமாராவ். இவர் ரசிகர்களால் ஜூனியர் என்டிஆர் என்று அழைக்கப்ட்டு வருகிறார்.

நடிகர், நடன கலைஞர், பின்னணிப் பாடகர் என பல திறமைகளைக் கொண்ட இவர், மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ஜூனியர் என்டிஆர் : 1983ம் ஆண்டு மே20ந் தேதி பிறந்த ஜூனியர் என்டிஆர், 1991ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து ராமாயணம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை வென்றார். பின் நின்னு சூடாலனி என்ற திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

டோலிவுட்டின் இளம் புலி : இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சினிமா பிரியர்களை தனது நடிப்பால் மகிழ்வித்து வரும் ஜூனியர் என்டிஆர் ஒவ்வொரு கதையையும் தேர்வு செய்து அதில், தனது சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார். இவரது ரசிகர்கள் இவரை டோலிவுட்டின் இளம் புலி என்று பட்டம் கொடுத்து அழைத்து வருகின்றனர்.

இன்று பிறந்த நாள் : ஜூனியர் என்டிஆர் இன்று தனது 41 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகினற்னர். இந்நிலையில், அவரின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், அவரின் சொத்து மதிப்பு ரூ.450 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Telugu popular star jr ntrs expensive assets in hyderabad

வாட்ச் பிரியர் : ஜூனியர் என்டிஆர் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு தனியார் ஜெட் விமானத்தையும், 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு மாளிகைக்கு சொந்தக்காரர் ஆவர். விதவிதமான வாட்ச் அணிவதில் ஆர்வம் கொண்ட இவர் ரிச்சர்ட் மில்லே வாட்ச் வைத்திருக்கிறார், அதன் விலை மட்டும் ரூ. 4 கோடி ஆகும். மேலும் Nautilus 40MM வாட் வைத்திருக்கிறார் இதன் விலை ரூ. 2.5 கோடியாம்.

சொகுசு கார் கலெக்‌ஷன் : கார் கலெக்ஷனில் ஈடுபாடு கொண்ட இவர், பல கோடி மதிப்பபுள்ள லம்போர்கினி உருஸ் காரும், 2 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரும், 2 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ,1 கோடி மதிப்புள்ள போர்ஸ்,1 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரும் வைத்து இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.