அவுஸ்திரேலியாவில் 95 வயதான பெண்ணை பொலிஸ் அதிகாரி மின்சார துப்பாக்கியால் தாக்கியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மின்சார துப்பாக்கியால் தாக்கப்பட்ட 95 வயது மூதாட்டி
சிட்னிக்கு தெற்கே 250 மைல் தொலைவில் உள்ள சிறிய நகரமான கூமாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் புதன்கிழமை காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
முதியோர் இல்லத்திற்குள் நுழைந்து டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட 95 வயது மூதாட்டி மீது டேசர் துப்பாக்கியால் சுட்ட அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி இப்போது விசாரணையில் உள்ளார்.
Getty Images
பொலிஸ் விசாரணை- நடந்தது என்ன?
இரண்டு நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் அதிகாரிகள், ஒரு வயதான நோயாளியான Clare Nowland சமையலறையிலிருந்து ஒரு கூர்மையான கத்தியை எடுத்து தாக்க முயன்றார் என கூறி டேசர் துப்பாக்கியால் தாக்கியதாக NSW உதவி பொலிஸ் கமிஷனர் Peter Cotter கூறியுளளார்.
5 அடி 2 அங்குலம் உயரமுள்ள அப்பெண் ஒரு சிறிய சிகிச்சை அறைக்குள் தனியாக இருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், அவரிடம் சில நிமிடங்கள் கத்தியைக் கீழே போட சொன்னார்கள். ஆனால், அவர் எதையும் கேட்கவில்லை என்பதால் சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு அதிகாரி ஒரு டேசரைக் கொண்டு அவரைத் தாக்கியதாக, விசாரணையில் தெரியவந்ததாக உதவி பொலிஸ் கமிஷனர் கூறினார்.
இதையடுத்து அந்த பெண் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, நவ்லேண்ட் கூமா மருத்துவமனையில் இருக்கிறார், அங்கு அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக உதவி பொலிஸ் கமிஷனர் கூறினார்.
Screengrab/ ABC News
சிக்கலில் பொலிஸ் அதிகாரி
காவல்துறை இந்த விடயத்தில் மிகுந்த முக்கியத்துவத்துடன் நடத்துவதாக அவர் மேலும் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
12 வருட அனுபவமுள்ள சிரேஷ்ட கான்ஸ்டபிளாக இருந்த குறித்த அதிகாரியிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரால் பெயர் வெளியிடப்படாத அந்த பொலிஸ் அதிகாரி, “nonoperational” பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதிகாரி கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வாரா என்பது இப்போது தெரியவில்லை, ஆனால் எந்த அதிகாரியும் சட்டத்திற்கு உட்பட்டுள்ளனர் என்று கோட்டர் உதவி பொலிஸ் கமிஷனர் கூறினார்.