சித்தராமையா பதவியேற்பு… கர்நாடகா அமைச்சரவையில் முதல் 8 பேர் இவங்க தான்… வெளியான லிஸ்ட்!

தென்னிந்தியாவில் பாஜகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மை உடன் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். அதன்பிறகு முதலமைச்சர் நாற்காலிக்கு சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையில் போட்டி ஏற்பட்டு நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரச்சினைக்கு முடிவுக்கு வந்தது.

சித்தராமையா இன்று பதவியேற்பு

பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இன்று (மே 20) நண்பகல் 12.30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொள்கிறார். இவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இங்கு தான் 2013ல் முதல்முறை சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

யார் அந்த அமைச்சர்கள்?

இன்றைய பதவியேற்பு விழாவில் துணை முதலமைச்சராக டிகே சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்,

பதவியேற்பு விழாவில் தலைவர்கள்

எஞ்சிய அமைச்சர்கள் அடுத்த சில நாட்களில் பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்

வரும் ஜூன் மாதம் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதில் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தான் பெரிய சிக்கலே இருக்கிறது. ஏனெனில் பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்படும் வகையில் வாக்குறுதிகள் பிரம்மாண்டமாக காத்திருக்கின்றன.

மக்களவை தேர்தல் இலக்கு

ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய், BPL ரேஷன் அட்டைகளுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 1,500 ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை முக்கியத்துவம் பெறுகின்றன.

அடுத்த ஓராண்டிற்குள் இவற்றை படிப்படியாக அமல்படுத்தி மக்கள் மத்தியில் நற்பெயர் பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 2024ல் மக்களவை தேர்தல் வருகிறது. அதற்குள் காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்க வேண்டும். இல்லையெனில் வரும் தேர்தலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.