மும்பையில் 19 மாடியில் ஹோட்டல் கட்டப்போகும் பாலிவுட் நடிகர் சல்மான் கான்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையில் 19 மாடிகள் கொண்ட ஹோட்டல் சல்மான் கான் சொந்தமாக ஹோட்டல் ஒன்றைக் கட்ட முடிவு செய்துள்ளார். சல்மான் கான் மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கிறார்.

அதே பகுதியில் உள்ள கார்டர் ரோடு என்ற இடத்தில் கடற்கரை அருகில் இந்த 19 மாடிகள் கொண்ட ஹோட்டலைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறார். குடியிருப்புக் கட்டடம் இருந்த ஒரு நிலத்தை சல்மான் கான் வாங்கியிருந்தார். அந்த இடத்தில் ஆரம்பத்தில் சல்மான் கான் குடியிருப்பு கட்டடம்தான் கட்டத் திட்டமிட்டிருந்தார்.

ஹோட்டல் கட்டப்பட இருக்கும் இடம்

ஆனால் அவர் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டு ஹோட்டல் கட்ட திட்டமிட்டு இருக்கிறார். ஹோட்டல் கட்டும் திட்டத்திற்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே மும்பை மாநகராட்சியில் ஒப்புதல் கேட்டு விண்ணபிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானின் தாயார் சல்மான் கான் பெயரில் இந்த கட்டட திட்டத்திற்கு ஒப்புதல் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. புதிதாகக் கட்டப்படும் ஹோட்டலில் கீழ் பகுதியில் 3 தளம் அமைக்கப்பட இருக்கிறது. அதோடு முதல் மற்றும் இரண்டாவது மாடியில் ரெஸ்டாரன்ட், காஃபி ஷாப் போன்றவை இருக்கும். மூன்றாவது மாடியில் ஜிம் மற்றும் நீச்சல் குளம் அமைக்கப்படும்.

7வது மாடியில் இருந்து 19வது மாடி வரை ஹோட்டல் அறைகள் இருக்கும். சல்மான் கானின் ஹோட்டல் கட்டும் திட்டத்திற்கு மும்பை மாநகராட்சி சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. விரைவில் கட்டுமானப் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சல்மான் கானின் செய்தித்தொடர்பாளரிடம் கேட்டதற்கு கேட்டுச்சொல்வதாக மட்டும் தெரிவித்தார். சல்மான் கான் வாங்கி இருக்கும் இடத்தில் தற்போது ஒரு கட்டிடம் இருக்கிறது. அக்கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய ஹோட்டல் கட்டப்படும். சல்மான் கானுக்கு மும்பைக்கு வெளியில் பன்வெல் என்ற இடத்தில் பல ஏக்கர் பரப்பில் பண்ணை வீடும் இருக்கிறது.

பாலிவுட் பிரபலங்கள் சமீப காலமாக ரியல் எஸ்டேட்டில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது தந்தை ராகேஷ் ரோஷனுடன் சேர்ந்து கடந்த 2020ம் ஆண்டு மும்பை ஜுகு பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் ரூ.100 கோடியில் 3 மாடிகளை விலைக்கு வாங்கி இருக்கின்றார்.

இது தவிர கமர்சியல் கட்டிடங்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜய் தேவ்கன் 47 கோடியில் பங்களா ஒன்றை வாங்கினார். நடிகர் ஜான் ஆபிரகாமும் மும்பையின் பிரதான இடத்தில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறார். பாலிவுட் பிரபலங்கள் பெரும்பாலும் மேற்கு புறநகர் பகுதியில் ரியல் எஸ்டேட்டில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர்.

சல்மான் கான்

இப்போது மும்பையில் பாந்த்ரா, ஜூகு பகுதியில் பெரும்பாலான திரைப்பட நட்சத்திரங்கள் வசிக்கின்றனர். நடிகர் ஷாருக் கான் பாந்த்ராவில் கடற்கரையையொட்டி வசித்து வருகிறார். பாந்த்ராவில் திரைப்பட நட்சத்திரங்கள் குடியேறுவது 1960களில் தொடங்கிவிட்டது. 1960ம் ஆண்டு நடிகர் ராஜேஷ் கண்ணா பாந்த்ராவில் குடியேறினார். மும்பை நகருக்குள் ஸ்டூடியோ அமைத்தவர்கள் கூட நாளடைவில் பாந்த்ரா பகுதிக்கு அவற்றை மாற்றிக்கொண்டனர்.

இப்போது மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள பாந்த்ராவில் இருந்து காந்திவலி வரை திரைப்பட நட்சத்திரங்கள் ஸ்டூடியோ அமைப்பது, வீடுகள் வாங்குவது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.