உலகின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பாள்களான ஹோண்டா, யமஹா, சுசூகி மற்றும் கவாஸாகி உள்ளிட்ட நிறுவனங்கள் டொயோட்டா மேற்பார்வையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறிய என்ஜின் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளது.
குறிப்பாக டொயோட்டா மோட்டார் நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்களை விட சிறந்ததாக ஃப்யூவல் செல் கொண்ட ஹைட்ரஜன் வாகனங்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.
HySE
HySE (Hydrogen small mobility & engine technology) என்று பெயரிடப்பட்டு ஜப்பானிய அரசின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (METI) ஆதரவளித்துள்ள இந்த கூட்டணி ஆனது சூரிய சக்தியில் கவனம் செலுத்துவது விவேகமற்றது என்று நம்புகின்றன. மின்சார வாகனங்கள் உலகம் முழுக்க விற்பனை வேகத்தை எட்டியிருந்தாலும், குறிப்பாக ஜப்பானிய நிறுவனங்கள் பேட்டரி மின்சார வாகனங்களை விட HySE மூலம் ஹைட்ரஜன் சிறந்த மாற்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
5 நிறுவனங்களும் தங்களுக்கான பிரிவினை தனத்தனியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இயந்திரங்களின் மாதிரி அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பனியை ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஆய்வு செய்ய உள்ளது.
அதேசமயம் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், வாகனத்தின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை ஆய்வு செய்கின்றது.
யமஹா மோட்டார்சைக்கிள் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையங்கள் மற்றும் டேங்க் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளும்.
கவாஸாகி கனரக நிறுவனம் எரிபொருள் நிரப்பும் சிஸ்டத்துடன் கூடிய டேங்க் மற்றும் FI மூலம் எரிபொருளை செயல்படுத்த ஆய்வு செய்கின்றது.
இறுதியாக, டொயோட்டா நிறுவனம் இந்த கூட்டணியில் உருவாக்கும் நுட்பங்களை அடிப்படையாக கொண்ட மாதிரிகளை தயாரித்து நிஜ உலகில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பனிகளை மேற்கொள்ளும்.
ஆனால் சிறிய என்ஜின் மட்டுமே என குறிப்பிட்டுள்ளதால், இருசக்கர வாகனங்களுக்கான என்ஜின் ஆகவோ அல்லது நான்கு சக்கர வாகனங்களுக்கு என உறுதிப்படுத்தப்படவில்லை.