Irfan Marriage: திருமணம் முடிந்த கையோடு கதறி அழுத இர்பான் மனைவி.. அப்படி என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: ஹோட்டல்களுக்கு சென்று உணவை சுவை பார்த்து ரிவ்யூ சொல்லும் பிரபல யூடியூபர் இர்பான் சமீபத்தில் ஆசிபா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட திருமண வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் யூடியூபர் இர்பான்.

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு அவரது மனைவி கதறி அழும் வீடியோ காட்சியையும் ஷேர் செய்துள்ளார் இர்பான்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் போட்டுள்ள கமெண்ட்டுகளும், மற்ற திருமண வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இர்பான் திருமணம்: யூடியூபர் இர்பான் கடந்த மே 14ம் தேதி தனது திருமணத்தை கோலாகலமாக நடத்தினார். சினிமா பிரபலங்கள் பலருக்கும் திருமணத்தில் கலந்து கொள்ள நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வந்தார்.

நடிகர் கவின் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணத்தில் கலந்து கொண்டு யூடியூபர் இர்பானையும் மணமகள் ஆசிபாவையும் வாழ்த்தினர். திருமண வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் இர்பான்.

Youtuber Irfan wife cried after marriage video goes trending

திருமணம் முடிந்த கையோடு அழுத மணமகள்: திருமணம் முடிந்த பிறகு பெற்றோர்களை விட்டு பிரியும் போது மணப்பெண்கள் அழுவது வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் அம்மா அப்பாவுடன் வளர்ந்து வந்த பெண்கள் இதற்கு மேல் அவர்களை விட்டு பிரிந்து புகுந்த வீட்டில் வசிக்கப் போகிறோம் என நினைத்தவுடன் வரும் பயம் காரணமாக அழுது விடுவார்கள்.

பெற்ற மகளை பிரிய போகிறோமே என அதுவரை அழாத அப்பாக்கள் கூட கண்ணீர் சிந்துவார்கள். அப்படியொரு அழகான உணர்ச்சி பெருக்கெடுத்த தருணம் இர்பான் திருமணத்தின் போதும் அரங்கேறிய நிலையில், அதனையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. இர்பான் மனைவி மற்றும் அவரது அப்பா என குடும்பத்தினர் பலரும் அழும் அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் இர்பான் மைண்ட் வாய்ஸ் நான் என்ன உங்க பொண்ண கடத்திட்டா போகிறேன் என்றும் இனிமேல் இர்பான் வியூ யூடியூப் சேனலில் உங்க பொண்ணை பார்க்கலாம் கவலைப்படாதீங்க அங்கிள் என்றும் நெட்டிசன்கள் வித விதமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.