Google அறிமுகம் செய்துள்ள புதிய வசதிகள்! நம் ஸ்மார்ட்போன்களில் எப்படி பயன்படுத்துவது?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
டெக்னாலஜி உலகில் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் Google நிறுவனம் அதன் புதிய Accessibility Tools வசதிகளை மேம்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்களின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த Accessibility tools இப்போது AI உதவியுடன் இயங்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

​புதிய Lookout Image Q&A Modeகடந்த 2019 ஆம் ஆண்டு கூகுள் அறிமுகம் செய்த Lookout ஆப் கண்பார்வை இல்லாதவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த ஆப் AI உதவியுடன் அவர்களுக்காக இமெயில் அனுப்புவதில் இருந்து வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவது வரை அனைத்தையும் செய்யும்.இதில் இப்போது புதிதாக ‘Image Question and answer’ வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக இனி ஒரு புகைப்படத்தை எடுத்தால் அதுபற்றிய விளக்கத்தை AI உதவியுடன் கூகுள் அவர்களுக்கு வழங்கும். இதனுடன் நாம் நேரடியாக கேள்விகளை கேட்டு பதில் பெறவும் முடியும்.
Google Live Captionஇனி AI உதவியுடன் வீடியோ, ஆடியோ என எதுவாக இருந்தாலும் Live Caption அதை உங்களுக்கு வழங்கும். மேலும் இதைவைத்து நாம் அடுத்தவரிடம் தொலைபேசியில் பேசமுடியும். இது முதல்கட்டமாக Google Pixel மற்றும் குறிப்பிட்ட சில சாம்சங் கேலக்சி போன்களுக்கு கிடைக்கும். இது ஆங்கிலத்துடன் சேர்த்து பிரெஞ்சு, இத்தாலியன், ஜெர்மன் போன்ற மொழிகளிலும் வேலை செய்யும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு Google Mapsஅதாவது நடக்கமுடியாத மாற்றுத்திறனாளிகள் செல்லக்கூடிய இடங்களை எல்லாம் இனி Google Maps நமக்கு தனியாக காட்டும். இதனால் இனி ஒரு இடத்திற்கு செல்வதற்கு முன்னதாக அந்த இடத்தை பற்றியும், அதில் மாற்று திறனாளிகள் WheelChair பயன்படுத்தி சொல்லமுடியுமா? என்பது பற்றியெல்லாம் நன்கு தெரிந்துகொண்டு செல்லலாம்.
​புதிய WearOS 4 அப்டேட்கடந்த ஆண்டு புதிய Text to speech வசதியை அறிமுகம் செய்தது போலவே இந்த ஆண்டு புதிய சவுண்ட் மற்றும் டிஸ்பிளே மோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி தனித்துவமான பல வசதிகளை நமது ஸ்மார்ட் வாட்ச்களில் பயன்படுத்தலாம்.
மேம்பட்ட Chrome Browserநாம் இனி டைப் செய்யும் URL விவரங்களை அறிந்து நமக்கு உதவும் விதமாக பல இணையதளங்களை கூகுள் நமக்கு அறிவுறுத்தும். இது தற்போது Chrome Desktop இல் இடம்பெற்றுள்ளது. இதுவே விரைவில் மொபைல் ஆப்களில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இனி மொழி தெரியாதவர்கள் கூட சுலபமாக அவர்கள் தேடும் இணையதளங்களை கண்டுபிடிக்கலாம். மேலும் ஏற்கனவே நாம் சென்ற இணையதளங்கள் விவரங்களும் சேமிக்கப்பட்டு நமக்கு தேவைப்படும் நேரத்தில் சுலபமாக கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.