Tirupati: பாதியாக குறைந்த காத்திருப்பு நேரம்.. திருப்பதி ஏழுமலையானை 3 மணி நேரத்தில் தரிசிக்கும் பக்தர்கள்!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். உலகின் பணக்கார கடவுள்களில் ஒருவரான ஏழுமலையானுக்கு காணிக்கையும் அதற்கு ஏற்றார் போலவே குவிந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். இதனால் நாள்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை தரிசனத்திற்காக காத்துள்ளனர் பக்தர்கள்.

Senthil Balaji: இல்லவே இல்ல… அந்த தகவல் முற்றிலும் தவறானது… பதறிய செந்தில் பாலாஜி!

அலைமோதும் கூட்டத்தால் இலவச தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், 36 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கின்றனர். வார இறுதி என்பதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்தவதற்காக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி சிபாரிசு கடித தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தற்போது வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் காத்திருப்பு நேரம் பாதியாக குறைந்துள்ளது. இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் தற்போது 18 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறைந்த நேரத்தில் சாமியை பார்க்க முடிவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Biggboss Gabriella: பிக்பாஸ் கேபியா இது… கொள்ளை அழகியா ஆயிட்டாங்க…

இன்று 300 ரூபாய் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். திருப்பதியில் 3.31 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.