திமுகவின் தெருமுனைப் பிரச்சாரத்தில் உள்ளே புகுந்த வாலிபர் ஒருவர், எம்எல்ஏவை ஆபாசமாக திட்டி வாக்குவாதம் செய்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் : தங்களது பகுதிக்கு சாலை வசதி சரியாக செய்யவில்லை என்று, எம்.எல்.ஏ-வை ஆபாசமாக திட்டி வாக்குவாதம் செய்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெங்கடாபுரம் பகுதியில் கந்திலி திமுக கிழக்கு ஒன்றிய சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் கேஎஸ்கே மோகன்ராஜ் மற்றும் எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது திடீரென கூட்டத்துக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், எம்எல்ஏ நல்ல தம்பியை சாரா மாறியாக கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வெங்கடாபுரம் பகுதியிலிருந்து பொன்னேரிக்கு செல்லும் சாலை ஏன் இதுவரை சீர் செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், எம்எல்ஏ-வை ஆபாசமான வார்த்தைகளில் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து எம்எல்ஏ நல்லதம்பி திருப்பத்தூர் வட்டார காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.