கொல்கத்தா,
நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. செப்டம்பர் 30-ந்தேதிக்கு பிறகு இந்த நோட்டுகள் அனைத்தும் புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளதை மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;
ரூ.2 ஆயிரம் நோட்டு என்பது ஒரு சலுகை அல்ல.. அது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். பண மதிப்பிழப்பின் போது நாம் எதிர்கொண்ட கஷ்டங்கள் மறக்க முடியாதவை.
அந்த கஷ்டத்திற்கு காரணமானவர்களை மன்னிக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.