மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில அளவில் கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஒரு வருடமாக தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவஹர் நேசன் மாநில கல்விக் கொள்கை குழு ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் மாநில கல்வி கொள்கை குழுவில் புதிதாக 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோப்புக்காட்சி மாநில கல்வி கொள்கை உருவாக்க குழுவில் புதிதாக 2 உறுப்பினர்கள் நியமனம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஞானமணி மற்றும் சென்னை பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் பழனி உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில கல்விக் கொள்கையின் இறுதி அறிக்கையை அளிக்க குழுவுக்கு 4 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செப்டம்பர் இறுதிக்குள் முருகேசன் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும் என அமைச்சர் அன்பு மகேஷ் அறிவித்துள்ளார்.