`லக்கேஜ் கட்டணம் அதிகமா இருக்கு' – நூதன செயலில் ஈடுபட்டப் பெண்… அபராதம் விதித்த விமான நிறுவனம்!

பயணத்தின் போது பயணிகளுக்கு இருக்கும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று பயணச் சாமான்களை எடுத்துச் செல்வது. அதுவும் விமானத்தில் செல்வதானால் லக்கேஜ் கட்டணம் அதிகம் செலுத்தவேண்டிவரும். அதனால், சில பயணிகள் அதைத் தவிர்க்க வேறு வழிகளைப் பயன்படுத்துவதும் உண்டு.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நண்பருடன் சுற்றுலா சென்றுவிட்டு, தன்னுடைய சொந்த ஊரான அடிலெய்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவரின் முகம் பார்ப்பதற்க்கு நடுத்தர உடல்வாகு கொண்டவராக இருந்திருக்கிறது. ஆனால், அவர் விமானத்தில் நுழைந்தபோது, பெருத்த உடல் கொண்டவராகக் காட்சியளித்தார்.

அபராதம் விதிக்கப்பட்ட பெண்

அவரின் முகத்துக்கும், உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லாமல் இருந்திருக்கிறது. இதனால் அவர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும், அவரை சோதனை செய்ததில் அவர் 6 அடுக்கு உடைகளை அணிந்திருந்தது தெரியவந்தது. லக்கேஜ் கட்டணப் பிரச்னையைச் சரிசெய்வதற்காக அவர் இவ்வாறு செய்ததாக விளக்கமளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து விமான நிலைய நிர்வாகம், விமானத்தின் கட்டண விதிமுறையை மீறியதால், அவருக்கு 13 பவுண்டுகள் அபராதம் விதித்தது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.