Bajaj Avenger 220 Street: மீண்டும் பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 220 பைக் அறிமுகம்

2023 Bajaj Avenger 160 Street

க்ரூஸர் ரக ஸ்டைலை பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அவென்ஜர் 220 பைக்கில் முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த ஸ்டீரிட் பைக் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனேவே, அவென்ஜர் 220 க்ரூஸ் விற்பனையில் உள்ளது.

2020 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட 220 ஸ்டீரிட் ஸ்டைல் மாடலின் தோற்றம் முன்பு போலவே அமைந்திருக்கின்றது. என்ஜின் உட்பட அனைத்தும் 220 க்ரூஸ் பைக்கில் இருந்து பெற்றுள்ளது. விற்பனையில் உள்ள அவென்ஜர் ஸ்டீரீட் 160 பைக் போலவே 220 மாடல் வரவுள்ளது.

2023 Bajaj Avenger 220 Street

சமீபத்தில் பல்சர் 220F மாடல் விற்பனைக்கு வெளியானதை தொடர்ந்து அவென்ஜர் 220 ஸ்ட்ரீட் மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த பைக்கில் ஏர்/ஆயில்-கூல்டு, 220cc, 8,500rpm-ல் 19hp பவர், 7,000rpm-ல் 17.55Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

அவென்ஜர் 220 பைக்கில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் அமைப்பைப் பெற்றதாக உள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் கொடுக்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

2023 பஜாஜ் அவென்ஜர் 220 குரூஸ் ₹.1,43,501 (எக்ஸ்-ஷோரூம், சென்னை) விலையில் உள்ளது, மேலும் புதிய அவென்ஜர் 220 ஸ்ட்ரீட் விலை சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.