காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள்… டைம் குறிச்ச ராகுல் காந்தி… கர்நாடகா மக்கள் செம ஹேப்பி!

கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள கண்டிவரா மைதானத்தில் இன்று நண்பகல் நடைபெற்றது. முதல்கட்டமாக 8 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் மட்டும் வெளிவந்துள்ளது. அதில் ஜி.பரமேஸ்வரா, எம்.பி.பட்டீல், மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே ஆகியோர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

காங்கிரஸ் வெற்றி

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பல்வேறு மாநில தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரளான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்பு முடிவடைந்ததும் பேசிய ராகுல் காந்தி, ஏழைகள், தலித்கள், பழங்குடி மக்களின் ஆதரவால் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது அமைந்துள்ள காங்கிரஸ் ஆட்சி மிகவும் தூய்மையான, ஊழலற்ற ஆட்சியாக இருக்கும்.

ராகுல் காந்தி பேச்சு

கடந்த 5 ஆண்டுகள் என்னென்ன துயரங்களை அனுபவித்தோம் என்று உங்களுக்கும், எனக்கும் நன்றாக தெரியும். காங்கிரஸின் வெற்றி குறித்து பலரும் வெவ்வேறு விதமான கருத்துகளை கூறுகின்றனர். ஆனால் நான் ஒன்றை மட்டும் கூறுகிறேன். நீங்கள் எங்களின் பக்கம் நின்றதால் தான் வெற்றி கிடைத்தது. பாஜக கையில் பணம், காவல்துறை, அதிகாரம் என அனைத்தும் இருந்தது.

அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

ஆனாலும் அவர்களை கர்நாடகா மக்களாக நீங்கள் முறியடித்து விட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக அறிவித்திருந்தோம். அதை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது. அடுத்த ஒன்று முதல் இரண்டு மணி நேரங்களில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள்

அதில் காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் சட்டத்தில் கையெழுத்திடப்படும்ம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற பிரச்சார வியூகங்கள் மட்டுமின்றி, தேர்தல் வாக்குறுதிகளும் முக்கியமானதாக அமைந்தது. அதில் 5 முக்கிய வாக்குறுதிகள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பெரிதும் எதிர்பார்த்து அம்மாநில மக்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.