வாஷிங்டன் : உலகின் மிக விலை உயர்ந்த, ‘பீட்சா’ அமெரிக்காவில், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
மேற்கத்திய நாடுகளின் உணவு கலாசாரத்தில், முக்கிய உணவாக பீட்சா, பர்கர் ஆகியவை கோலோச்சுகின்றன.
அதிகபட்சம் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை, பீட்சா, பர்கர் ஆகியவற்றுக்காக செலவழிக்கும் பழக்கம் இன்றைய தேதியில், நம் நாட்டு வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடமும் அதிகரித்து உள்ளது.
ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த, 57,000 ரூபாய்க்கு பீட்சாவை அறிமுகம் செய்ய உள்ளது. அமெரிக்காவின், மிட்டவுன் பகுதியில் உள்ள, ட்ரூரி பீர் கார்டன் என அழைக்கப்படும் உணவகம் ஒன்று, அந்நாட்டு டாலர் மதிப்பில் 700 டாலர்களுக்கு (இந்திய ரூபாயில், 57,987க்கு), புதிய மனுவில் பீட்சாவை அறிமுகம் செய்ய உள்ளது.
இதை அந்த பகுதியைச் சேர்ந்த, ஜார்ஜ் சியோரிஸ் என்பவர், தன் சகோதரியான சியோரிஸ் பாலிஸூடன், இணைந்து நடத்தி வருகிறார்.
இது குறித்து, அந்த உணவகத்தின், இணை உரிமையாளரான, ஜார்ஜ் சியோரிஸ் கூறியுள்ளதாவது:
புதிய மெனுவின்படி, தேன், கருப்பு நிற உணவு பண்டங்களுடன், காக்னாக் உடன் லாப்ஸ்டர் பிளேம்க்ரில் செய்யப்பட்ட வாக்யு ஸ்டீக் ஆகியவையும், பீட்சாவில் இருக்கும்.
இதன் வாயிலாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, சில அற்புதமான, ஆக்கப்பூர்வமான மற்றும் சுவையான பொருட்களை வழங்குவதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
சியோரிஸ் பாலிஸ் கூறுகையில்,’ நானும், என் சகோதரியும், இம்மனுவை உருவாக்கியதில், மகிழ்ச்சியாக இருக்கிறோம் ; வாடிக்கையாளர்கள் அனைவரையும் வரவேற்பதை, நாங்கள் எதிர்பார்த்து இருக்கிறோம்,’ என்றார். .
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்